கன்னியாகுமரி : வாகன பார்க்கிங் இடம் தேர்வு
அடுத்த மாதம் சீசன் முன்னிட்டு;
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் மற்றும் கோடை விடுமுறை சீசன் ஆகிய முக்கிய 2 சீசன் காலங்கள் உள்ளன. இதில் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாத காலங்களும் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாகும். ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்கள் கோடை விடுமுறை சீசன் காலமாகும். இந்த ஆண்டு சபரிமலைஅய்யப்ப பக்தர்கள் சீசன் அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்குகிறது. இந்த சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந் தேதி வரை 60 நாட்கள் அமலில் இருக்கும். இந்த சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் முன் னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த அடிப்படையில் கன்னியாகுமரியில் சபரிமலை சீசனை யொட்டிகன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பஸ், கார், வேன் மற்றும் வாகனங்களை நிறுத்துவதற்காக கன்னியா குமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா வாகனங் கள் நிறுத்தும் இடத்தை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.