கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், காந்தியடிகளின் 157-வது பிறந்தநாள் விழா கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமை வகித்து காந்தி படத்திற்கு மலர் மாலை அணிவித்தார். தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் சுரேஷ் ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னிலை வகித்தனர். அதனைத்தொடர்ந்து, கர்ம வீரர் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளையொட்டி காமராஜர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். நடைபெற்ற நிகழ்ச்சிகளில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜர், கன்னியாகுமரி நகர்மன்ற தலைவர் குமரி ஸ்டீபன், நகராட்சி ஆணையர் கண்மணி, உட்பட அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.