சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

களியக்காவிளை;

Update: 2025-10-03 03:37 GMT
மார்த்தாண்டம் தனியார் ஆம்புலன்ஸ் சங்கம் சார்பில் போதைப் பொருள் மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி களியக்காவிளையில் இருந்து மார்த்தாண்டம் வரை நடைபெற்றது. இப் பேரணிக்கு ஆம்புலன்ஸ் சங்க தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். செயலாளர் ஜினு, பொருளாளர் ஜெகன், கௌரவ தலைவர் வினுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். களியக்காவிளை காவல் ஆய்வாளர் (பொறுப்பு) வேளாங்கண்ணி உதயரேகா கொடியசைத்து, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஆம்புலன்ஸ் பேரணியை துவக்கி வைத்தார். இதில் மார்த்தாண்டம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் செல்லசுவாமி, திமுக மூத்த நிர்வாகி எஸ். மாகீன் அபுபக்கர், திமுக தகவல் ஒருங்கிணைப்பு பிரிவின் குமரி மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரூபன், மேல்புறம் ஒன்றிய திமுக இளைஞரணி துணைத் தலைவர் எம். அனிஸ்கான், மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் தோமஸ் சிங், பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் ஷாஜகான், மேல்புறம் ஒன்றிய திமுக அயலக அணி துணை அமைப்பாளர் அன்வர், தமிழ்நாடு ஜனநாயக கிறிஸ்தவ பேரவை செயலர் எமலின் மெலின்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். களியக்காவிளையில் துவங்கிய விழிப்புணர்வு ஆம்புலன்ஸ் பேரணி படந்தாலுமூடு, திருத்துவபுரம், குழித்துறை வழியாக மார்த்தாண்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் நிறைவடைந்தது.

Similar News