அடையாளம் தெரியாத வாகன மோதியதில் வாலிபர் பலி

மதுரை மேலூர் அருகே நான்கு வழி சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் .வாலிபர் பலியானார்;

Update: 2025-10-03 06:10 GMT
மதுரை மாவட்டம் கருங்காலக்குடி குன்னக்குடிபட்டியை சேர்ந்த கிட்டுவின் மகன் கணேஷ்( 23) என்பவர் மதுரை திருச்சி நான்கு வழி சாலையில் கருங்காலக்குடியில் சேது மஹால் முன்பாக நேற்று முன்தினம் (அக்.1)இரவு 10.30 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார் .இது குறித்து இவரது தந்தை இவர்கள் தந்தை கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.

Similar News