தளவாய் பாளையத்தில் சாலையை கடக்க முயன்றவர் மீது அடையாளம் தெரியாத கார் மோதி உயிரிழப்பு.
தளவாய் பாளையத்தில் சாலையை கடக்க முயன்றவர் மீது அடையாளம் தெரியாத கார் மோதி உயிரிழப்பு.;
தளவாய் பாளையத்தில் சாலையை கடக்க முயன்றவர் மீது அடையாளம் தெரியாத கார் மோதி உயிரிழப்பு. கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா தளவாபாளையம் அருகே மலையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா என்கிற ராசு வயது 55. இவர் அக்டோபர் 1 புதன்கிழமை அன்று இரவு 9.30 மணி அளவில் கரூர் - நாமக்கல் சாலையில் தளவாய் பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் அருகே நடந்து சென்றவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அதே சாலையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் ராஜா என்கிற ராசு மீது மோதி விட்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த ராஜா என்கிற ராசுவின் உறவினர் மாரியப்பன் என்கிற மாரிமுத்து அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு சென்ற வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.