மாயனூர் அருகே நடந்து சென்ற வட மாநில தொழிலாளி மீது டூவீலர் மோதி விபத்து.
மாயனூர் அருகே நடந்து சென்ற வட மாநில தொழிலாளி மீது டூவீலர் மோதி விபத்து.;
மாயனூர் அருகே நடந்து சென்ற வட மாநில தொழிலாளி மீது டூவீலர் மோதி விபத்து. உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே மஜில் பார்த்தி பகுதியைச் சேர்ந்தவர் கனா நிஷாத் வயது 20. இவர் புதன்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் கரூர் - திருச்சி சாலையில் மாயனூர் பகுதியில் செயல்படும் தனியார் ஹோட்டல் எதிரே நடந்து சென்ற போது கரூர் மாவட்டம் புகலூர் தாலுக்கா நொய்யல் மறவா பாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர் நடந்து சென்ற வடமாநில இளைஞர் கனா நிஷாத் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்ச சம்பவம் தொடர்பாக அவர் அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட மாயனூர் காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.