கரூர் தனியார் விடுதியில் தனியார் காற்றாலை நிறுவனத்தின் மேலாளர் உறக்கத்தின் போது சுயநினைவு இன்றி உயிரிழப்பு.

கரூர் தனியார் விடுதியில் தனியார் காற்றாலை நிறுவனத்தின் மேலாளர் உறக்கத்தின் போது சுயநினைவு இன்றி உயிரிழப்பு.;

Update: 2025-10-03 12:25 GMT
கரூர் தனியார் விடுதியில் தனியார் காற்றாலை நிறுவனத்தின் மேலாளர் உறக்கத்தின் போது சுயநினைவு இன்றி உயிரிழப்பு. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை செம்பூர் டாட்டா ஹவுஸிங் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் மகாதேவ் பவர் வயது 46. இவர் மும்பையில் செயல்படும் டாடா பவர் விண்டு மில் நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றி வந்தார். இதனிடையே கரூர் - கோவை சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கி திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் புதன்கிழமை அன்றுகாலை அவரது அறைக்கு சென்றவர் அடுத்தநாள் காலை வரை அவரது அறை திறக்கப்படாதது கண்டு தனியார் ஓட்டல் ஊழியர் மாற்று சாவி பொருத்தி திறந்த போது ராஜேஷ் மகாதேவ் பவர் சுய நினைவின்றி உறங்கியவாறு இருந்துள்ளார். உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த கரூரில் செயல்படும் டாட்டா பவர் மில் மேலாளர் மோகன்ராஜ் அளித்த புகாரில் கரூர் மாநகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News