இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் ஆகியவற்றில் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக களியக்காவிளையில் நேற்று கையெழுத்து இயக்க அலுவலகம் திறக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ் குமார் எம் எல் ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார். தாரகை கத்பட் எம் எல் ஏ, குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால்சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.