தேனியை சேர்ந்தவர் முத்துலட்சுமி (28). இவர் நேற்று முன்தினம் கம்பத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்பொழுது அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்ற பொழுது இவருக்கு பின்னால் பாலா, கிஷோர் ஆகியோர் ஓட்டி வந்த இரட்டை மாட்டு வண்டி இவர் மீது மோதியது. இதில் முத்துலட்சுமி படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து கம்பம் வடக்கு காவல்துறையினர் வழக்கு (அக்.3) பதிவு.