ஜேடர்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதி கல்லூரி மாணவர் பலி.
ஜேடர்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதி கல்லூரி மாணவர் பலி.;
பரமத்திவேலூர் அக்.2: பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே பாகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபால் (50). இவரது மகன் தீபக் (18). இவர் நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. அதன் காரணமாக மாணவன் தீபக் தனது வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் நேற்று காலை அருகாமையில் உள்ள கண்டிபாளையத்தில் அவரது நண்பனை பார்ப்பதற்காக வீட்டிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு பாகம்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் அதே எதிரே சாலையில் வடகரையாத்தூர் பகுதியை சேர்ந்த கதிரவன் (32) என்பவர் டிராக்டரை ஓட்டி அப்போது டிராக்டர் தீபக் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் தீபக் மோட்டார் சைக்கிளுடன் சாலையில் விழுந்தார். டிரைவர் கதிரவன் டிராக்டரை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். தீபக்கிற்கு தலை மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து உடனடியாக தீபக்கை பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தீபக் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தீபக்கின் தந்தை ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் இந்திராணி டிராக்டரை அதிவேகமாக ஒட்டி வந்து விபத்து ஏற்படுத்திய டிராக்டர் டிரைவர் கதிர்வன் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸ் டிராக்டரை பறிமுதல் செய்து தப்பி ஓடிய கதிரவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.