கொலையானவரின் குடும்பத்திற்கு நீதி கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை மேலூரில் கொலையானவரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;
மதுரை மேலூர் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலையான பொறியியல் பட்டதாரியான ராம் பிரகாஷ் (28) குடும்பத்திற்கு நிவாரண நிதி மற்றும் அரசு வேலை வழங்க கோரி மேலூர் பேருந்து நிலையம் அருகே நேற்று ( அக்.3) 14 தென்னரசு நாட்டு அம்பலகாரர்கள், முக்குலத்து சமுதாயத அமைப்பினர் மற்றும் 18 கிராம அம்பலகாரர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கிராம பெண்கள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.