மாயமான சிறுவர்களை கண்டுபிடிக்க கேட்டு ஆர்ப்பாட்டம்

குளச்சல்;

Update: 2025-10-04 07:39 GMT
குமரி மாவட்டம் குறும்பனை பகுதியை சேர்ந்த ராஜன் என்பவரின் மகன்கள் 2 பேர் கடந்த 2023 நவம்பர் 3ம் தேதி சைமன் காலனி கடற்கரை பகுதியில் மாயமானார்கள். இது ஒரு குளச்சல் போலீசிலும் தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றத்திலும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. போலீசார் சிறுவர்கள் கடலில் தவறி விழுந்து இறந்ததாக அறிக்கை சமர்ப்பித்தனர். ஆனால் அறிக்கையை  சிறுவர்களின் தாயார் ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து அவர் மாவட்ட கலெக்டர், எஸ்பி யிடம் சிறுவர்களை கண்டுபிடித்து தர கோரிக்கை விடுத்து வருகிறார். இந்த நிலையில் சிறுவர்களை கண்டுபிடிக்க கேட்டு மார்க்சிஸ்ட் லெனினின்ட் (செங்கொடி) சார்பில் நேற்று குளச்சல் காமராஜர் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வக்கீல் பால்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News