திருப்பரங்குன்றம் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் போலீசார் சோதனை.
திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் வெடிகுண்டு மிரட்டலையடுத்து போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.;
மதுரை திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள அஸ்ரத் சிக்கந்தர் சுல்தான் பாதுஷா தர்காவில் வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து இன்று (அக்.4) மதியம் திருப்பரங்குன்றம் கோவில் காவல் நிலைய போலீசார் மலை மேல் உள்ள சிக்கந்தர் தர்காவில் வெடிகுண்டு தடுப்பு போலீஸ்சாருடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது