சேடப்பட்டியில் நலம் காக்கும் மருத்துவ முகாம்

மதுரை மாவட்டம் சேடப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது;

Update: 2025-10-04 11:21 GMT
மதுரை மாவட்டம் சேடபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பாக இன்று (அக.4) நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் சுகாதார துறை துணை இயக்குநர் குமரகுருபரன், இணை இயக்குநர் செல்வராஜ் சேடபட்டி வட்டார மருத்துவ அலுவலர் விஸ்வநாதபிரபு அரசு இராஜாஜி மருத்துவமனை டீன் அருள்சுந்தரேஸ், நுரையீரல் துறை துணை இயக்குநர் ராஜசேகரன் தொழுநோய் பிரிவு துணை இயக்குநர் விஜயன் குடும்ப நலன் துணை இயக்குநர் நடராஜன், செந்தில்னேஷ், சேடபட்டி சுகாதார நிலைய மருத்துவர் மாரிச்சாமி உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News