தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வி (44). இவர் நேற்று (அக். 3) அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக காலடியில் இருந்த பாம்பு ஒன்று இவரை தீண்டி உள்ளது. செல்வியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.