மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் போக்ஸோ சட்டத்தில் கைது
மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் போக்ஸோ சட்டத்தில் கைது;
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே கொங்கராயகுறிச்சியில் செயல்படும் தனியார் மெட்ரிக். பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றியவர் மணிகண்டன் (35). செய்துங்கநல்லூர் அருகே உள்ள புளியங்குளத்தைச் சேர்ந்த இவர், இதே பள்ளியில் பிளஸ் 2 பயின்ற மாணவியிடம் தவறாக நடக்க முயன்றதாக பள்ளி நிர்வாகம் அண்மையில் நீக்கியது. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட பிளஸ் 2 மாணவிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, மாணவியின் பெற்றோர் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் மாணவியை மணிகண்டன் கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் மணிகண்டன் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவியை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.