மரக்கன்றுகள் நடும் விழா

மதுரை ஒத்தக்கடையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.;

Update: 2025-10-05 08:45 GMT
யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக 235 ஆவது வார மரக்கன்றுகள் நடும் விழா உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளை எதிரில் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர் பிரபு முன்னிலை வகித்தார். உறுப்பினர் பாலமுருகன் வரவேற்றார். ஆலோசகர் ராகேஷ் தொகுத்து வழங்கினார். தலைமை ஆசிரியர் தென்னவன் அவர்கள், ஆசிரியர் பணியில் அர்ப்பணிப்பு, அறப்பணி, குழந்தைகள் முன்னேற்றத்தில் பங்கு, சிறந்த வழிகாட்டி மற்றும் மரங்களின் பயன்கள் ஆகியவை குறித்து உரை நிகழ்த்தினார். பூவரசு மரம், இலுப்பை மரம் முதலிய மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்றுகளுக்கு கவாத்து பணி, பராமரிப்பு பணி, களப்பணி முதலியன நடைபெற்றது. நிகழ்விற்கு தேவையான பூவரசு, இலுப்பை முதலிய மரக்கன்றுகளை சோழன் குபேந்திரன் வழங்கினார். நீர் ஊற்றப்பட்டது. 'மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம், இயற்கையைக் காப்போம்' என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது. விழாவில் யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர்கள் சிலம்பம் மாஸ்டர் பாண்டி உறுப்பினர்கள் மீனாட்சி தட்டச்சு உரிமையாளர் ஜெயபாலன், சந்திரா, விக்னேஸ்வரி, ஜஸ்வர்யா, கல்யாணி, அர்ச்சனா, அசோக்குமார், வெண்பா, பாலாமணி, பிரசீத், ரூபன் , ஜெய்சீத், சுதர்சன், ஷாமினி மற்றும் , உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் கைகளால் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்வில் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு களப்பணி செய்தனர். உறுப்பினர் சாலினி நன்றி கூறினார்.

Similar News