கரூர் துயர சம்பவத்தில் உண்மை கண்டறிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை விசாரணைக்கு அமைக்க வேண்டும்-கருப்பையா கரூரில் பேட்டி.

கரூர் துயர சம்பவத்தில் உண்மை கண்டறிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை விசாரணைக்கு அமைக்க வேண்டும்- கருப்பையா கரூரில் பேட்டி.;

Update: 2025-10-05 09:03 GMT
கரூர் துயர சம்பவத்தில் உண்மை கண்டறிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை விசாரணைக்கு அமைக்க வேண்டும்.தலித் விடுதலை இயக்க தலைவர் கருப்பையா கரூரில் பேட்டி. கடந்த 27 ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரப்புரையின் ஏற்பட்ட துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை தலித் விடுதலை இயக்க தலைவர் கருப்பையா தலைமையில் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் ஏமூர் புதூர் பகுதிக்கு நேரடியாக சென்று ஆறுதல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த சம்பவத்தில் இறந்தவர்கள் அனைவருக்கும் தனது அமைப்பின் சார்பில் இரங்கல் தெரிவிப்பதாகவும் இறந்த 41 பேரில் 15 பேர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்த அவர் மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார். அதில் இந்த சம்பவத்திற்கு காரமான கரூர் மாவட்ட ஆட்சியர் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். தமிழக அரசின் தனி நீதிபதி கமிஷன் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் கமிஷனை ரத்து செய்ய வேண்டும்.இதற்கு காரணம் அவர் ஏற்கனவே தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவாகரத்தில் ஆனையமாக விசாரித்து அளித்த அறிக்கை கேள்விக்குறியாக உள்ளது எனவும், இவர் திராவிட மாடல் அரசுக்கு ஆதரவான நிலைப்பாடு உடையவர் எனவும்,பிற மாநிலங்களைச் சேர்ந்த முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு விசாரணைக்கு அமைக்கப்பட வேண்டும்.இதன் மூலம் உண்மை குற்றவாளிகளை அடையாளம் காண வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு தலா 50 லட்சம் வழங்க வேண்டும்.காயமடைந்தவர்களுக்கு தலா 10 லட்சம் வழங்க வேண்டும் என மாநில அரசை கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார். இந்நிகழ்வின் போது சமநீதி கழக செய்தி தொடர்பாளர் ரவிச்சந்திரன் மக்கள் சட்ட உரிமை இயக்கத் தலைவர் அண்ணாதுரை பழந்தமிழர் புலிப்படை தலைவர் மின்னல் வரதன்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News