ஐ.ஜி அஸ்ரா கார்க் கரூர் துயர சம்பவம் குறித்து விசாரணையை துவக்கினார்.
ஐ.ஜி அஸ்ரா கார்க் கரூர் துயர சம்பவம் குறித்து விசாரணையை துவக்கினார்.;
ஐ.ஜி அஸ்ரா கார்க் கரூர் துயர சம்பவம் குறித்து விசாரணையை துவக்கினார். கரூர் வேலுச்சாமி புரத்தில் கடந்த 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலின் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் கரூர் ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்த் தலைமையில் தனிப்படைகள் மற்றும் விசாரணை குழு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஐ.ஜி . அஸ்ரா கார்க் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) குழுவிடம் நேற்று விசாரணை கோப்புகளை சென்னைக்கு எடுத்துச் சென்று ஒப்படைத்துள்ளனர். இந்த நிலையில் இன்று 8 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொள்வதற்காக கரூர் வருகை தந்துள்ளனர். எஸ்.ஐ.டி குழுவை சேர்ந்த எஸ்.பி சியாமளா தேவி, விமலா ஆகியோர் முதல் கட்டமாக கரூருக்கு வருகை தந்தனர்.அதனை தொடர்ந்து தற்போது ஐ.ஜி அஸ்ரா கார்க் கரூரில் சம்பவம் நடந்த இடமான வேலுசாமிபுரத்தில் முதல் கட்ட விசாரணை துவக்கி உள்ளார்.இதனால் கரூரில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.