மத்தூர் அருகே ஸ்ரீ நிவாசபெருமாள் கோவிலில் பணம், நகை கொள்ளை.
மத்தூர் அருகே ஸ்ரீ நிவாசபெருமாள் கோவிலில் பணம், நகை கொள்ளை.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் அடுத்த கோட்டை ஸ்ரீ நிவாச பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் 3-ம் சனிக்கிழமை ஒட்டி பூஜைகள் நடந்த பின்னர் கோவிலை பூட்டி விட்டு பூசாரி சென்றார். நேற்று அதிகாலை பூசாரி சம்பத் வந்து பார்த்தபோது கோவில் பூட்டை உடைத்து இருப்பதை பார்த்து பொதுமக்களுடன் உள்ளே சென்று பார்த்த போது சுவாமிகள் கழுத்தில் இருந்த 1 பவுன் தங்க செயின், பணம், 2 வெங்கல குத்து விளக்குகள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து புகாரின் பேரில் மத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்