தேன்கனிக்கோட்டை அருகே மது குடித்த தொழிலாளி உயிரிழப்பு.
தேன்கனிக்கோட்டை அருகே மது குடித்த தொழிலாளி உயிரிழப்பு.;
கிருஷ்ணகிரி மவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள வைசூர் அக்ரஹாரம் பகு தியில் இயங்கும் தனியார் பால் டைரியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த அணில்குமார் (27) இவரது சகோதரர் சுனேத்குமார் (25) ஆகிய 2 பேரும் தொழிலாளிகளாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அனில்குமார் மது போதையில் மயங்கி நிலையில் இருந்த அவரை சுனேத்குமார் தேன்கனிக்கோட்டை தனியார் ஆஸ்பத்திரி மற்றும் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோத்த மருத்துவர் ஏற்கனவே அணில்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.