கிருஷ்ணகிரி மவட்டம் ஒசூரில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் மற்றும் ஒசூர் வைஷ்ணவ கைங்கர்ய சபை ஆகியவை இணைந்து உலக நன்மைக்காகவும், மக்கள் அனைவரும் சுபிட்சமாக வாழ வேண்டியும், பஞ்ச கருட சேவை ஓசூர்-தளி சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தன. நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட பிராம ணர் சங்க தலைவர் சுதா வி.நாகராஜன் தலைமை தாங்கினார். இதில் 5 கோவில்களின் உற்சவ மூர்த்திகள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம், சடாரி சேவையும் மற்றும் துளசி ஆகிய பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஓசூர் மாநக ராட்சி துணை மேயர் ஆனந்தய்யா, உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.