தேனி மாவட்டத்தில் விதிமீறும் வாகனங்களை போக்குவரத்து காவல்துறையினர் பிடிக்கும் பொழுது அவற்றில் சிலர் வாக்கு வாதத்தில் ஈடுபடுவது, அரசியல் கட்சியினரை தெரியும் எனக் கூறி தகராறில் ஈடுபடுவது தொடர்கிறது. இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஏ.ஐ., கேமராக்கள் மூலம் விதிமீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் அதற்கான கேமராக்கள் விரைவில் பொருத்தப்பட உள்ளன என மாவட்ட காவல் நிர்வாகம் தகவல்.