தர்காவில் வைகோ பூரண குணமடைய வேண்டி சிறப்பு பிரார்த்தனை

திண்டுக்கல் பேகம்பூர் ஹழ்ரத் அமீருன்னிஷா பேகம் தர்காவில் வைகோ பூரண குணமடைய வேண்டி சிறப்பு பிரார்த்தனை;

Update: 2025-10-06 05:01 GMT
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடல்நல குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதுசமயம் அவர் விரைவில் பூரண குணமடைந்து தமிழக மக்களின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் உழைத்திடவும் குரல் கொடுக்கவும் இறைவனை வேண்டி பேகம்பூர் ஹழ்ரத் அமீருன்னிஷா பேகம் சாகிபா அம்மா அவர்களின் தர்காவில் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வராகவன் வழிகாட்டுதலின்படி மாநகரச் செயலாளர் செல்வேந்திரன் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பாக சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் காஜாமைதீன் மற்றும் அனீஸ் பாபு ஏற்பாட்டில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு பிரசாதங்கள் வழங்கினர். மேலும் இந்நிகழ்வில் மாநில தொண்டரணி துணைச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சையது முகமது, ஜெய்லானி, முகமது அன்சாரி, செந்தில், அப்துல் நசீர், நிஜாமுதீன், சலீம், வருசை இப்ராஹிம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் சிறப்பு பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Similar News