கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த மாணவிக்கு பள்ளியின் சார்பில் மலர் அஞ்சலி.

கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த மாணவிக்கு பள்ளியின் சார்பில் மலர் அஞ்சலி.;

Update: 2025-10-06 07:16 GMT
கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த மாணவிக்கு பள்ளியின் சார்பில் மலர் அஞ்சலி. கடந்த 27-ம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த தான்தோன்றி மலை மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி தரணிகா அவர்களுடைய மறைவிற்கு பள்ளியில் தாளாளர் பேங்க் சுப்ரமணியன் தலைமையில் மலர் அஞ்சலியும் மௌன அஞ்சலியும் செலுத்தினர். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் ஜெயசித்ர தமிழ் துறை தலைவர் அழகம்மாள் மற்றும் ஆசிரியர்கள் மாணாக்கர்கள் கலந்து கொண்டு மௌன அஞ்சலியும் மலரஞ்சலியும் செலுத்தினர்

Similar News