கரூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

கரூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.;

Update: 2025-10-06 08:20 GMT
கரூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் மாவட்டம், கரூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் சங்கத்தின் கௌரவ பொதுச்செயலாளர் குப்புசாமி தலைமையில் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்தில் 2021 ஆண்டுக்கு பின்னர் ஓய்வு பெற்றுள்ள பணியாளர்கள் அனைவருக்கும் உடனடியாக ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும், தேவையற்ற இடங்களில் முதல்வர் மருதகம் ஏற்படுத்தி தினசரி ரூபாய் ஆயிரத்துக்கு விற்பனை செய்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் நடவடிக்கை கைவிடப்பட வேண்டும், தாயுமானவர் திட்டத்தில் வீடு தேடி சென்று பொருட்கள் விநியோகிப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை நிவர்த்தி செய்ய வேண்டும், சொந்த ஊருக்கு அருகாமையில் பணிபுரியும் வகையில் இடம் மாறுதலுக்கு வழிவகை செய்யப்பட வேண்டும், மகளிர் பனிபுரியும் இடங்களில் அவசியம் கழிவறை வசதி செய்து தர வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கரூர் மாவட்ட தலைவர் கதிரவன், மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் செல்வரத்தினம் உள்ளிட்ட மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு மாநிலத் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர், கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை 07.10.2025 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

Similar News