டூ வீலர் நேருக்கு நேர் மோதல். முதியவர் பலி.

மதுரை அலங்காநல்லூர் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டது முதியவர் பலியானார்.;

Update: 2025-10-06 08:48 GMT
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் விஸ்வாசிட்டி கேட்டுக்கடையை சேர்ந்த ராமசாமி (65) என்பவர் தன் மனைவி சாந்தியுடன் இருசக்கர வாகனத்தில் மனைவி ஓட்டிச் செல்ல கணவர் பின்னால் அமர்ந்து அலங்காநல்லூர் மெயின்ரோட்டில் சென்றபோது அதே ஊரைச் சேர்ந்த ராஜ மன்னன் மகன் ஜெயராஜ் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். இதில் ராமசாமிக்கு பலமாக அடிபட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (அக்.5) உயிரிழந்தார். இது குறித்து அலங்காநலலூர் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News