வெள்ளகோவிலில் இரத்ததான முகாம்
வெள்ளகோவிலில் மகாத்மா காந்தி நற்பணி மன்றம் சார்பில் ரத்ததான முகாம்;
மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை, அரசு மேம்படுத்தப்பட்ட சமுதாய சுகாதார நிலையம் சார்பில் ரத்த தான முகாம் வெள்ளகோவிலில் நடந்தது. இதற்கு அறக்கட்டளை தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். அறக்கட்டளை செயலாளர் சீனிவாசன், சுகாதார ஆய்வாளர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமினை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார். முகாமில் 84 பேரிடம் தலா ஒரு யூனிட் ரத்தம் பெறப்பட்டு தாராபுரம் அரசு ரத்த வங்கிக்கு வழங்கப்பட்டது. தாராபுரம் அரசு ரத்த வங்கி மருத்துவர் சத்யராஜ் தலைமையிலான குழுவினர் ரத்ததானம் பெற்றனர்.