ஆட்டோ ஓட்டுநர்கள் உதவிதொகை கேட்டு ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
ஆட்டோ ஓட்டுநர்கள் உதவிதொகை கேட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்;
ஆந்திராவில் ஆண்டுக்கு ஒரு முறை ஆட்டோ டிரைவர் சேவை திட்டத்தின் மூலம் ரூபாய் 15,000 வழங்கப்படுவது போல் தமிழகத்திலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஆட்டோ ஓட்டுநர்கள் முற்றுகை இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் கணேஷ் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஆட்டோ ஓட்டுநர்கள் புற்றுகையிட்டனர். குறிப்பாக தமிழகத்தில் உத்தேசமாக 50 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் சரக்கு பாகம் ஆற்ற ஓட்டுநர்கள் தொழில் செய்து வருகின்றனர் இவர்களுக்கு கடந்த 15 ஆண்டு காலமாக மீட்டர் கட்டணம் மாற்றியமைக்கப்படாமல் உள்ளது மேலும் பன்னாட்டு நிறுவனங்களான ஓலா சூப்பர் ராபிடோ போன்றவைகளின் காரணத்தால் அவர்களது தொழில் மிகவும் நலிவடைந்து குடும்பங்கள் வறுமையில் வாழ்கின்றது. இந்நிலையில் ஆந்திராவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை ஆட்டோ டிரைவர் சேவை என்ற திட்டத்தின் மூலம் 15,000 வழங்கப்படுகின்றது அதேபோன்று தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஆட்டோ டிரைவர் குடும்பத்திற்கும் ரூபாய் 15,000 நிதி உதவி வழங்க வலியுறுத்தி இந்த ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து தங்களது தொழிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.