பாவூர்சத்திரத்தில் லாரி மோதியதில் பெண் உயிரிழப்பு

லாரி மோதியதில் பெண் உயிரிழப்பு;

Update: 2025-10-07 01:10 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் பாவூா்சத்திரம் பாரதி நகரில் வசிப்பவா் ஞானஅதிசயசெல்வன் மனைவி ஜெயராணி (58). இவா், தனது இரு மகன்களுடன் வசித்து வந்தாா். இந்த நிலையில் கடையம் சாலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அருகே நடந்துசென்றபோது, கேரளத்துக்கு அரிசி பாரம் ஏற்றி வந்த மினி லாரி அவா் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவா் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். பாவூா்சத்திரம் போலீஸாா் லாரி ஓட்டுநரான நல்லூரைச் வெங்கடேஷ் (22 ) மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Similar News