கண்ணீருடன் கிளம்பிய பிரேமலதா விஜயகாந்த்

தயார் இறந்த செய்தி கேட்டு அழுகையுடன் அனைத்து நிகழ்ச்சிகளை ரத்து சாெந்த ஊருக்கு கிளம்பினார் பிரமலதா..;

Update: 2025-10-07 05:05 GMT
தர்மபுரி மக்களை தேடி இல்லம் நாடி பிரச்சார நிகழ்ச்சியில் தர்மபுரியில் நேற்று பாளையம்புதூர் மற்றும் நல்லம்பள்ளி ஆகிய இடங்களில் பிரச்சார பேருரையாற்றினார்.பின்னர் நேற்று இரவு தர்மபுரியிலேயே தங்கி இன்று காலை 10 மணி அளவில் சேலம் மாவட்டத்திற்கு செல்லவிருந்த நிலையில் இன்று காலை பிரேமலதா விஜயகாந்தின் தயார் வயது மூப்பு காரணமாக இறந்த செய்தி கேட்டு மனமுடைந்து அழுதார்.பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு உடனடியாக இன்று தமது சகோதரன் சுதீஷ் உடன் சென்னை கிளம்பினார்.ஆர்வத்துடன் அவரை காண வநது ரசிகர்கள் சூழலை பார்த்து அவருக்கு ஆறுதல் கூறி ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Similar News