குமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்தவர் ஹென்றி மனைவி ஜோஸ்பின் லதா (54). இவர் நேற்று தனது மருமகள் மற்றும் உறவினர் ஒருவருடன் பழைய தங்க நகைகள் கொடுத்துவிட்டு, புதிய நகைகள் எடுப்பதற்காக நாகர்கோவில் சென்றார். பின்னர் நகைகளை வாங்கிக்கொண்டு இரவு ஒன்பது மணியளவில் நாகர்கோவில் இருந்து பஸ்ஸில் ஏறி கருங்கல் சென்ற வந்தடைந்தனர். கருங்கல் பஸ் நிலையத்தில் இறங்கி பார்த்தபோது, ஜோஸ்பின் லதா பையில் இருந்த மணிபர் சும், 5 பவுன் தங்க நகையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து கருங்கல் காவல் நிலையத்தில் நேற்று இரவு புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.