குமரி மாவட்டம் சிதறால் பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார் (41). கொத்தனார். இன்னும் திருமணம் ஆகவில்லை. சுனில் குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுனில் குமார் தனக்கு சொந்தமான 16 சென்ட் நிலத்தை விற்று விட்டு, வீட்டிலிருந்து வெளியேறி மாயமானதாக கூறப்படுகிறது. இதற்கு இடையே பூட்டப்பட்டிருந்த அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. உடனடி அக்கம்பக்கத்தினர் இது குறித்து அருமனை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று வீட்டை திறந்து உள்ளே பார்த்தனர். அப்போது கட்டில் அடியில் சுனில்குமார் அழுய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீசார் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.