பைக் மோதி விபத்து பார்மசிஸ்ட் பரிதாப பலி

மார்த்தாண்டம்;

Update: 2025-10-07 05:19 GMT
குமரி மாவட்டம் முளங்குழி, சென்னிதோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் திரவியம் இவரது மகன் ஸ்டீபன் (27), இவர் வெளிநாட்டில் பார்மசிஸ்டாக பணிபுரிந்து வருகிறார்.  தற்போது விடுமுறையில் ஊருக்கு  வந்துள்ளார்.  சென்னி தோட்டம் பகுதியைச் சேர்ந்த பால்சிங்  மகன் விக்னேஷ் (25 ). இருவரும் நண்பர்கள்.  நேற்று ஸ்டீபன் தனது பைக்கில் விக்னேஷை பின்னால் அமர வைத்து காப்புக்காட்டிலிருந்து வெட்டுவெந்நி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.       சென்னி தோட்டம்  பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த போது பைக் திடீரென நிலை தடுமாறி சாலையின் ஓரம் நின்ற  டெலிபோன் கம்பத்தில் மோதியது. இதில் பைக்கிலிருந்து இருவரும் தூக்கி வீசப்பட்டானர். இதில் ஸ்டீபன் சம்பவ இடத்தில் பரிதாபமாக பலியானார். விக்னேஷ் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் காணப்பட்டார். இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.

Similar News