ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (41). இவர் நேற்று முன்தினம் தோட்ட வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பி உள்ளார். அன்று இரவு இவருக்கு திடீரென தீராத தலைவலி ஏற்பட்டுள்ளது. தலைவலி அதிகமான நிலையில் ஜெகன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் மருத்துவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுக்குறித்து வைகை அணை காவல் துறையினர் வழக்குப்பதிவு.