தேனி, ஜெயமங்கலம் அருகே பொம்மிநாயக்கன்பட்டி அரசு பள்ளி தொடர் விடுமுறை முடிந்ததையடுத்து நேற்று (அக்.6) பள்ளி தலைமையாசிரியை திறந்துள்ளார். அவர் பள்ளியின் பொருள்கள் வைத்திருந்த அறைக்கு சென்று பார்த்த போது அங்கிருந்த ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த டிவி, ஒலிபெருக்கி, தையல் இயந்திரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. திருட்டு குறித்து ஜெயமங்கலம் காவல் துறையினர் வழக்கு பதிவு.