கரூர் -இனி இது போல் ஒரு துயர சம்பவம் எப்போதும் எங்கும் நடந்திடக்கூடாது- நடிகை அம்பிகா கரூரில் பேட்டி.
கரூர் -இனி இது போல் ஒரு துயர சம்பவம் எப்போதும் எங்கும் நடந்திடக்கூடாது- நடிகை அம்பிகா கரூரில் பேட்டி.;
கரூர் -இனி இது போல் ஒரு துயர சம்பவம் எப்போதும் எங்கும் நடந்திடக்கூடாது- நடிகை அம்பிகா கரூரில் பேட்டி. கரூர் அடுத்த வேலுச்சாமிபுரம் பகுதியில் செப் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மூச்சு திணறி 41 பேர் உயிரிழந்தனர் அந்த இடத்திலேயே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒரு சில குடும்பத்தினை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இது குறித்து அம்பிகா செய்தியாளர் சந்திக்கும் பொழுது யாரையும், எந்த கட்சியையும் குறை சொல்வதற்காக நான் வரவில்லை. சம்பவம் நடந்ததற்கு யார் மீது தவறு என்பதை சொல்வதற்கும் நான் வரவில்லை. இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடக்கக் கூடாது. அரசியல் கட்சி கூட்டங்களுக்கு குழந்தைகளை தூக்கிக்கொண்டு செல்லக்கூடாது என்று அறிவுரை கூறுகின்றனர். ஆனால், அதையும் மீறி குழந்தைகளை தூக்கி கொண்டு செய்கின்றனர். அதற்காக அவர்களை அடித்து தடுத்து நிறுத்த முடியுமா? இனிமேல் இப்படி நடக்கக் கூடாது. உயிரிழந்த குழந்தைகளுக்கு ரஜினி, கமல், விஜய் என யாரையும் தெரியாது. ஆனால், அந்த குழந்தைகளை தூக்கிக் கொண்டு செல்கின்றனர். இனி இது போன்ற நிகழ்வு எங்கும் நடைபெறக்கூடாது என தெரிவித்தார்.