நல்லூர் அருகே சாலை விபத்தில் கணவன் மனைவி பலி.

நல்லூர் அருகே சாலை விபத்தில் கணவன் மனைவி பலி போலீசார் விசாரணை.;

Update: 2025-10-07 12:52 GMT
பரமத்தி வேலூர்.அக்,.07:  பரமத்தி வேலூர் தாலுகா நல்லூர் அருகே உள்ள செய்யாம்பாளையத்தைச் சேர்ந்தவர் தங்கராசு(60). இவரது மனைவி கண்ணாயா(57).  இவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை மதியம் சொந்த வேலை காரணமாக சித்தாளந்தூர் சென்று விட்டு சொந்த ஊரான செய்யாம்பாளையத்திற்கு தங்களது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது  சித்தாலந்தூர் அருகே உள்ள பீச்சபாளையம்  பேருந்து நிறுத்தத்தில் இருந்து  செய்யாம்பாளையம் செல்ல சாலையைக் கடக்க முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தில் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு தலை மற்றும் உடல்களில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நல்லூர் காவல்துறையினர் இருவரின் உடல்நிலை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் காரை ஓட்டி வந்த திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை சேர்ந்த சாதிக் பாஷா(48) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News