திருச்செங்கோடு நகராட்சி பகுதியில்நிலுவையில் உள்ள குடிநீர் கட்டணங்களை செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் நகராட்சி ஆணையாளர் அதிரடி அறிவிப்பு
திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம்ரூ 6 கோடியே 86 லட்சம் நிலுவைஉள்ளது இதனை உடனடியாக செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி ஆணையர் வாசுதேவன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்;
திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம்ரூ 6 கோடியே 86 லட்சம் நிலுவை இருப்பதோடு நடப்பு தொகையும் கட்ட வேண்டி உள்ளது எனவே குடிநீர் இணைப்பு பெற்றுள்ளவர்கள் அனைவரும் உடனடியாக குடிநீர் கட்டணத்தை செலுத்த வேண்டும் குடிநீர் கட்டணம் செலுத்த தவறினால் குடிநீர் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் வாசுதேவன்வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்