புலியூர் அருகே வேன் கவிழ்ந்து கூலி தொழிலாளி சம்பவ இடத்தில் உயிரிழப்பு.

புலியூர் அருகே வேன் கவிழ்ந்து கூலி தொழிலாளி சம்பவ இடத்தில் உயிரிழப்பு.;

Update: 2025-10-07 14:13 GMT
புலியூர் அருகே வேன் கவிழ்ந்து கூலி தொழிலாளி சம்பவ இடத்தில் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் புலியூர் அருகே கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக கிராமங்களில் இருந்து கூலி தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது, இந்த விபத்தில் பஞ்சபட்டியை சேர்ந்த பெண் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானதாக கூறப்படுகிறது. மேலும் உடன் வந்த பெண் கூலி தொழிலாளர்கள் பெண் ஒருவர் இறந்ததை கண்டு மயக்கம் அடைந்து கீழே விழுந்தனர். இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர். உயிரிழந்த பெண்ணின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News