கரூர்- மின்வாரியத்தில் கேங்மேன் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்.

கரூர்- மின்வாரியத்தில் கேங்மேன் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்.;

Update: 2025-10-07 14:28 GMT
கரூர்- மின்வாரியத்தில் கேங்மேன் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம். மின்வாரியத்தில் கேங்மேன் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலகத்திற்கு முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கரூரில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு கேங்மேன் பணியாளர்களின் 11-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மண்டலம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கேங்மேன் பணியாளர்களுக்கு கள உதவியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். கேங்மேன் பணியாளர்களுக்கு 01.12.19 முதல் வழங்க வேண்டிய 6 சதவீத ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். கரூர் மற்றும் நாமக்கல் மின் பகிர்மான வட்டத்தில் துணை மின் நிலையங்களில் 3- முறை பணிக்கு 2 பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். விடுபட்ட கேங்மேன் பணியாளர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க வேண்டும். கேங்மேன் பணியாளர்களுக்கு சொந்த மாவட்டத்திற்க்கு செல்ல ஊர் மாற்றம் உத்தரவு வழங்க வேண்டும். கேங்மேன் பணியாளர்களுக்கு உள்முகத் தேர்வில் வாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News