மதுரையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
மதுரை பழங்காநத்தம் பகுதியில் கூட்டுறவு துறை ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்;
மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள கூட்டுறவு மாவட்ட இணை பதிவாளர் அலுவலகம் அருகே இன்று (அக்.7) மாலை தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கம் சார்பில் பதவிஉயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை நூற்றுக்கும் மேற்பட்டோர் எழுப்பினார்கள்.