அவனியாபுரத்தில் அதிமுகவினர் சாலை மறியல்.
மதுரை அவனியாபுரத்தில் எம்எல்ஏ தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.;
மதுரை அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் ஜல்லிக்கட்டு வாடி வாசல் அருகே உள்ள எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் கைது செய்ய வலியுறுத்தி இன்று (அக்.7) காலை அவனியாபுரத்தில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லாமல் போனதால் எம்எல்ஏ உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதனால் அப் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.