முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்;
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், PUES, வெள்ளக்கல் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., நேற்று நேரில் பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள். இத்திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள் வேண்டி விண்ணப்பித்த பயனாளிகளின் மனுவின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, உடனடியாக இத்திட்ட முகாமில் சுமார் 25-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகள், பிறப்பு சான்றிதழ்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலைக்கான அடையாள அட்டைகள், மின் இணைப்பு பெயர் மாற்ற ஆணை, முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டைகள் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.