பாம்பு தீண்டியதில் முதியவர் உயிரிழப்பு

உயிரிழப்பு;

Update: 2025-10-08 07:30 GMT
பெரியகுளம் தாலுகா நல்லகருப்பன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (62). இவர் தனது வீட்டிற்கு வெளியே சைக்கிளை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாம்பு ஒன்று இவரை தீண்டி உள்ளது. அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அவர் நேற்று (அக்.7) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு.

Similar News