இராயப்பன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன். இவரது மகன் பிரஜித் இன்பண்ட் (13) அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் மாணவன் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளார். இதன் காரணமாக மனவேதனையில் இருந்து வந்த மாணவன் நேற்றுமுன்தினம் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து இராயப்பன்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.