எலவனூர்-உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம் எல் ஏ இளங்கோ.

எலவனூர்-உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம் எல் ஏ இளங்கோ.;

Update: 2025-10-08 07:52 GMT
எலவனூர்-உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம் எல் ஏ இளங்கோ. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எலவனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது அடிப்படை பிரச்சனை மற்றும் பொது பிரச்சனைகள் குறித்த மனுக்களை அதிகாரியிடம் அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் சரியான ஆவணங்களை இணைத்து மனு செய்த பயனாளிகளுக்கு உடனடியாக அந்த மனுக்கள் மீது தீர்வு கண்டு உத்தரவு அளித்தனர். இதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ.

Similar News