விசிக கட்சியினர் சாலை மறியல்
மதுரையில் விசிக கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
சென்னையில் நேற்று விசிக கட்சி தலைவர் திருமாவளவன் சென்ற காரில் மோதிய வழக்கறிஞரை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் விசிக கட்சியினர் இன்று (அக்.8) காலை மதுரை பெரியார் பேருந்து நிலையம் கட்டப்பொம்மன் சிலை அருகே சாலை மறியலில் சுமார் 30 பேர் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் கலைந்து சென்றனர்.