தென்காசி அருகே ஆட்டோ மீது பைக் மோதி தொழிலாளி பலி
ஆட்டோ மீது பைக் மோதி தொழிலாளி பலி;
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள சேர்வைக் காரன்பட்டி வடக்குத்தெ ருவை சேர்ந்த மறுமுருகன் மகன் ஜீவா (22). இவரும், கடையம் கல்யாணிபுரம் தெற்குத்தெருவை சேர்ந்த இசக்கி மகன் முத்துக்குமார் (25) என்பவரும் டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகின்றனர். வி.கே.புரத்தில் இருந்து பைக்கில் இருவரும் ஊருக்கு சென்று கொண்டி ருந்தனர். பைக்கை ஜீவா ஓட்டினார். ஆழ்வார்கு றிச்சி மெயின் ரே ரோட்டில் வரும் போது தனியார் பள்ளியில் ஆசிரியர்களை இறக்கி விட்டு வலதுபுறமாக ஆட்டோ திடீரென திரும் பியது. அப்போது பின்னால் வந்த பைக், ஆட்டோ மீது மோதியதில் ஜீவா பலத்த காயமடைந்தார். தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்க னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து காய மடைந்த முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் ஆழ்வார் குறிச்சி போலீசார் ஆட்டோ ஓட்டுநர் கருத் தப்பிள்ளையூரை சேர்ந்த லூர்து மகன் அந்தோணி (37) என்பவர் மீது வழக் குப்பதிந்து விசாரித்து வரு கின்றனர். ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.