தமிழ்நாடு அரசு தொழிலாளர் கொள்கையை வெளியிட வலியுறுத்தி திருச்செங்கோட்டில் சிஐடியு தொழிற்சங்கத்தினர்கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே ஏ ஐ டி யு சி சார்பில் தமிழ்நாடு அரசு தொழிலாளர் கொள்கையை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.15 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்;
ஏஐடியுசி தொழிற்சங்கங்கள் சார்பில் தமிழ்நாடு அரசு தொழிலாளர் கொள்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. அதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே திருச்செங்கோடு ஏஐடியு சி தொழிற்சங்கங்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியூசி மாவட்ட உதவி தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார்.பொது தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கோபிராஜ், ஏ ஐ டி யு சி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை போக்குவரத்து சம்மேளன மாநில செயலாளர் முருகராஜ் துவங்கி வைத்தார். மாநில செயலாளர் சின்னசாமி, மாவட்ட செயலாளர் அன்புமணி, மாவட்ட பொதுச் செயலாளர் தனசேகரன், உள்ளிட்ட தொழிலாளர் சங்க, விவசாய சங்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர நிர்வாகிகள், கலாசி சங்க நிர்வாகிகள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். தொழில் வளர்ச்சியில் முன்னேறி வரும் தமிழ்நாடு அரசு தொழிலாளர்களுக்கு உரிய பங்கை வழங்க தர வேண்டும். சட்டபூர்வ உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கான உரிமைகளை பறித்து முதலாளிகள் விருப்பம் போல் தொழிலாளர்களை கொடூரமாக சுரண்ட ஒன்றிய அரசு அனுமதிப்பதை தடுக்க வேண்டும். ஒன்றிய அரசு இந்த கொள்கையை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர் உரிமைகளை ஒன்றிய அரசு பறிப்பதற்கு எதிராக தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும்என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட், ஏஐடி யுசி நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் என 15 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.